
இலங்கையில் போரின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில் ,இலங்கையில் கடந்த காலங்களில் போரின்போதும் வன்முறைகளின்போதும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களை இன ரீதியிலோ அல்லது மத ரீதியிலோ பிரித்துப் பார்க்கக்கூடாது. அனைவரும் மனிதர்கள்.உயிரிழந்தவர்களின் வலி அவர்களின் உறவுகளுக்குத்தான் தெரியும்.
அதில் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்துவதை எவரும் தடுக்கவே முடியாது” – என்றார்.


