deepamnews.lk
இலங்கை

இலங்கையில் புதிய தாழமுக்கம் – 03 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு…

banner

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். 

மேலும், தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 27.11.2021 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும். மீனவர்கள் எதிர்வரும் 27.11.2021 வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment