deepamnews.lk
இலங்கை

பஸ் விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி – பலர் காயம்

banner

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தின் போது பஸ் தடம் புரண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment