deepamnews.lk
விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 388 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது அவுஸ்ரேலியா

banner

ஆஷஸ் டெஸ்ட் தொடரின நான்காவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு, இங்கிலாந்து அணிக்கு  388 ஓட்டங்களை அவுஸ்ரேலிய அணி,  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அவுஸ்ரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலிய அணி 416 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோனி பேர்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன், 294 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தநிலையில் 4ம்  நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 358 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில், 5 வது நாள் ஆட்டம் இன்ற நடைபெறுகிறது.

banner
banner
banner

Related posts

ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

Deepam News

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

Deepam News

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

Deepam News

Leave a Comment