deepamnews.lk
விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் போராடித் தோல்வியைத் தவிர்த்தது இங்கிலாந்து அணி

banner

ஆ‌ஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியுள்ளது.

அவுஸ்ரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 416 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில்,  6 விக்கெட்டுக்கு 265 ஓட்டங்கள் குவித்த நிலையிலும், ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 294 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 388 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், ஆடியது.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்றுக் காலை கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய போது, ஹமீட் 9 , டேவிட் மலான் 4 ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கிராவ்லி 77,  ஜோ ரூட் 24,  பென் ஸ்டோக்ஸ் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பேர் ஸ்டோவ் ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 41 ஓட்டங்களையும்,  ஜோஸ் பட்லர்  11 ஓட்டங்களையும்,  மார்க் வுட் ஓட்டம் எதையும் பெறாமலும் வெளியேறினார்.

9-வது விக்கெட்டுக்கு ஜக் லீச் உடன் ஸ்டூவர் பிராட் ஜோடி சேர்ந்தார்.

10.4 ஓவர்களை இங்கிலாந்து எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலையில், கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டும் இருந்தன.

இருவரும் தாக்குப் பிடித்து விளையாடிய போதும், 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜக் லீச் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு 12 பந்துகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் பிராட் உடன் அண்டர்சன் ஜோடி சேர்ந்தார்.

101-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரை பிராட் சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

அடுத்த ஓவரை ஸ்மித் வீசினார். இந்த ஓவரை அண்டர்சன் தாக்குப் பிடித்து விளையாட இங்கிலாந்து 102 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

banner
banner
banner

Related posts

ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

Deepam News

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

Deepam News

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

Deepam News

Leave a Comment