deepamnews.lk
விளையாட்டு

பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் – நியூசிலாந்து அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு.

banner

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 521 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

அணியின் கப்டன் டாம் லாதம் 252 ஓட்டங்களைக் குவித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஷத்மன் இஸ்லாம் 7,  நஜ்முல் ஹசேன் 4, கப்டன் லிட்டன் தாஸ் 8 ஓட்டங்களுடனும், முகம்மட் நைம், மொமினல் ஹக் ஆகியோர் ஓட்டங்களை எடுக்காமலும், அடுத்தடுத்து வெளியேற, பங்களாதேஷ் அணி 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது.

பின்னர் யாசிர் அலி 55 ஓட்டங்களும், நருல் ஹசன் 41 ஓட்டங்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 41.2 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தற்போது பங்களாதேஷ் அணி 395 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளதால், நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  உள்ளது.

banner
banner
banner

Related posts

ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

Deepam News

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

Deepam News

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

Deepam News

Leave a Comment