deepamnews.lk
விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட்டில் பங்களாதேஷ் அணியை பழி தீர்த்தது நியூசிலாந்து

banner

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டேஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

அந்த அணியின் ரொம் லாதம் 252 ஓட்டங்களும், கான்வே 109 ஓட்டங்களும் குவித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 126 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, பாலோ-ஆன் ஆனது.

அந்த அணியின் யாசிர் அலி 55, நுருல் ஹசன் 41 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை  எடுத்தனர்.

நியூசிலாந்து அணியில் டிரென்ட் பவுல்ட் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கிய போது,  பங்களாதேஷ்  அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டு இருந்த போதும்,  லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 102 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டை ராஸ் டெய்லர் வீழ்த்த பங்களாதேஷ் 278 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

இரட்டை சதம் அடித்த ரொம் லாதம் ஆட்ட நாயகன் விருதும், கான்வே தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

banner
banner
banner

Related posts

ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

Deepam News

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

Deepam News

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

Deepam News

Leave a Comment