deepamnews.lk
சர்வதேசம்

கோவிட் விதிமுறைகளை மீறினாரா பிரிட்டன் பிரதமர் – நெருக்கடியை சந்திக்கிறார் போரிஸ் ஜோன்சன்

banner

முடக்கநிலைக் கட்டுப்பாடுகளை மீறியதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரிட்டனில் முதல் முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது டவுனிங் ஸ்டிரீட் (Downing Street) பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்து கொண்டாரா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் முற்படுகின்றனர்.

அப்போது சமூக ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளைத் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மேலதிகாரி வரவழைத்ததாக, மின்னஞ்சல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

banner
banner
banner

Related posts

டோங்கா எரிமலை வெடிப்பு ஹிராஷிமா அணுகுண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தது – நாசா தகவல்

Deepam News

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் நட்பு நாடுகளும் உடனடி பதில் நடவடிக்கை

Deepam News

ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை

Deepam News

Leave a Comment