deepamnews.lk
சர்வதேசம்

சோமாலிய தலைநகரில் கார் குண்டுவெடிப்பு – 8 பேர் பலி.

banner

சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் (Mogadishu) நேற்று இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில், எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

குண்டுதுளைக்காத வாகனத் தொடரணி ஒன்றை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது யாருடைய வாகனத் தொடரணி என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும், நகரின் நோயாளர் காவு வண்டிச் சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் எட்டுப் பேரின் சடலங்களை மீட்டுக் கொண்டு சென்றதாக அவர் கூறியுள்ளார்.

கார்கள், முச்சக்கர வண்டிகள் எரிந்த நிலையில் காணப்படுவதாகவும், இறந்தவர்களின் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சிதறிக் கிடந்தன என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் சென்ற வாகனத் தொடரணியே தாக்குதலுக்குள்ளாகியதாகவும், சிலர் காயமடைந்தனர் என்றும், நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்கெய்டா ஆதரவு பெற்ற அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

banner
banner
banner

Related posts

டோங்கா எரிமலை வெடிப்பு ஹிராஷிமா அணுகுண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தது – நாசா தகவல்

Deepam News

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் நட்பு நாடுகளும் உடனடி பதில் நடவடிக்கை

Deepam News

ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை

Deepam News

Leave a Comment