deepamnews.lk
இந்தியா

தமிழ் மொழியின் சிறப்புக்கு திருக்குறளே உதாரணம் – இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்

banner

தமிழ் மொழி சிறப்புக்கு திருக்குறளே உதாரணம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடம் என்பனவற்றை நேற்று மெய்நிகர் முறையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே, பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.

“ தமிழ் மொழி மிக தொன்மையானது. இதன் மதிப்பை கண்டு நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.

தமிழ் மொழி எவ்வளவு சிறப்பானது என்பதற்கு திருக்குறளே உதாரணம்.

இந்த திருக்குறளின் பெருமை அறிந்து குஜராத் மொழி உள்ளிட்ட பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த தமிழர்களை நான் வரவேற்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பேச்சை தொடங்கும் போது, பிரதமர் மோடி தமிழில் வணக்கம் தெரிவித்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டார்.

banner
banner
banner

Related posts

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Deepam News

தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து இரண்டு முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Deepam News

நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

Deepam News

Leave a Comment