
யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் கொல்லப்பட்ட மீனவர் எட்வேட் மரியசீலனின் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
குறித்த போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார்.கடற்படையினரின் படகு மோதியே குறித்த மீனவர் கொல்லப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கான இன்று, பொது மக்கள், மீனவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.கடல் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்’, ‘கடல் விபத்துகளுக்கு இழப்பீடு’, ஆகிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


