deepamnews.lk
இலங்கை

இலங்கை விரைவில் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் – சீனா நம்பிக்கை

banner

இலங்கையானது நிச்சயமாக கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் , அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.2014ஆம் ஆண்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு நட்புறவு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது.

இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன.இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் மேலும் எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment