deepamnews.lk
இலங்கை

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி

banner

பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக, உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியதாகக் குற்றம்சாட்டியுள்ள கத்தோலிக்க திருச்சபை, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்த அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யும் எண்ணம் அமைச்சருக்கும், அரசுக்கும் மற்றும் காவல்துறைக்கும் இல்லை என்பது தெளிவாகிறது.என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்  சரத் வீரசேகர, சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளை ஊடகங்களுக்கு வெளியிட்டது குறித்து கத்தோலிக்க திருச்சபையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவ்வாறு செய்ததன் மூலம் காணொளியில் காணப்படும் சந்தேக நபர் தலைமறைவாகி விடலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் தேவாலயத்திற்குள் வைப்பதற்கே அந்த கைக்குண்டு கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பேராயர் மல்கம் ரஞ்சித்,

“பொலிசார் வழக்கமாக சந்தேக நபர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர்.

விசாரணைகள் தொடர்பாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முடிவு இருப்பதாக அமைச்சரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

அமைச்சர் தனது கதைகளை சீனர்களிடம் சென்று கூறட்டும்.  எங்களிடம் கூற வேண்டாம்.

அமைச்சரின் அறிக்கைகளை ஏற்க கத்தோலிக்க திருச்சபை தயாராக இல்லை.” என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment