deepamnews.lk
இலங்கை

பொறளை தேவாலயம், நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் கைக்குண்டுகளை வைத்தவர் ஒருவரே….

banner

நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையிலும் பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய வளாகத்திலும் கைக்குண்டுகள் வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், முக்கியமான சதிகாரர் ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு இடங்களிலும் ஒரே நபர் தான் குண்டுகளை வைத்ததாகவும், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து, அவற்றைப் பற்றி தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது அரசாங்கத்தையும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் நடவடிக்கை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில்,உள்ள மூளையாக செயற்பட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment