deepamnews.lk
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

banner

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  தென்ஆபிரிக்க அணி, 2 இற்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 223 ஓட்டங்களும், தென்ஆபிரிக்கா 210 ஓட்டங்களும் எடுத்தன.

13 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட்  ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்தார்.

வேறு எந்த வீரரும் குறிப்பிடக் கூடிய வகையில் விளையாடவில்லை. 

இதனால், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைளயும் இழந்தது.

இதன் மூலம் தென்ஆபிரிக்க அணிக்கு 212 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, தென்ஆபிரிக்க அணி 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது.

3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 29.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

இதையடுத்து,  நேற்று 4- ஆம் நாள் ஆட்டத்தில்,  தென் ஆபிரிக்க வீரர்கள் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

63.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 212- ஓட்டங்களை தென்ஆபிரிக்க அணி எட்டியது.

தென் ஆபிரிக்க அணியில் அதிகபட்சமாக  கீகன் பீட்டர்சன் 82 ஓட்டங்களைக் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தியுள்ளது.

banner
banner
banner

Related posts

ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

Deepam News

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

Deepam News

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

Deepam News

Leave a Comment