deepamnews.lk
இலங்கை

இந்தியாவிற்கு வரைபை அனுப்புவதில் ஏன் அவசரம்? எனக்கே புரியவில்லை என்கிறார் சுமந்திரன்

banner

இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் காட்சிகளினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான அவசர நிலை குறித்து தனக்கு எதுவும் தெரியாதென த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப் பொங்கல் விழாவில் பங்கு கொண்ட எம் எம்.எ சுமந்திரன்  அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படவுள்ள குறித்த ஆவணம் தொடர்பான வேலைத்திட்டம் மலையக முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட்டது . குறித்த கடிதத்தில் அரசியல் அபிலாசைகளுக்கு மத்தியில் மதிப்பு கொடுக்கும் வண்ணமாக  கடிதத்தில் இருந்து ஒரு சில விடயங்கள் நீக்கப்பட்டு கடந்த 21 ஆம் திகதி மாலை ஐந்து முப்பது மணி வரை எட்டப்பட்டு இருந்தது. 

ஆனால் தற்போது முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் தாங்கள் கையொப்பம் இடவில்லை என விலகிய பிறகு அப்படியான விட்டுக்கொடுப்புக்கள் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.அதனாலே மிக முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கொடுத்து வருகின்ற மக்கள் ஆணை எதுவென்று விவரிக்கின்ற பகுதி அங்கே இருக்கிறது.

அது மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் தற்போது கச்சாத்திடும் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள். இதனால் இறுதியிலும் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கையளிக்கப்பட இருந்த கடிதம் 12 ஆம் திகதி கொடுப்பதாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக 10 ஆம் திகதியன்று இந்திய தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலே இப்படியான ஒரு கடிதம் கொடுக்கப்பட வேண்டுமா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அது சம்பந்தமாக எனது மனதிலும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன.

ஏன் இப்படியான தருணத்தில் இப்படியான முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு விடை எங்களுக்கு தெரியாது. அதை முன்னெடுத்தவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரே விடயத்தை ஒரே குரலில் வலியுறுத்தி முன்வைத்து ஒரு முக்கியமான நிகழ்வு என மேலும் தெரிவித்தார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment