deepamnews.lk
இலங்கை

சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் ஜெய்சங்கர் கோரிக்கை

banner

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இணையவழியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் .

குறித்த சந்திப்பின்போது  இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க  வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார் . குறித்த சந்திப்பின் போது 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து பேசப்பட்டது .

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் , எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி போன்ற விடயங்கள் தொடர்பாகவும் குறித்த இணையவழி கலந்துரையாடலின் போது பேசப்பட்டது 
மேலும் குறித்த சந்திப்பின்போது இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment