deepamnews.lk
இலங்கை

இலங்கையில் மேலும் 160 ஒமிக்ரோன் மாறுபாடு உறுதி

banner

இலங்கையில் மேலும் 160 ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான  நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

நாட்டில் தற்போது வரை கோவிட் அச்சுறுத்தல் தணியவில்லை . புதிய வைரஸான ஓமிக்ரோனின் தாக்கத்தை உலக நாடுகள் சந்தித்து வரும் நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது .

இந்த நிலையில் ஒமைக்ரொன் தொற்றாளர்களை கண்டறிவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது .

அதனை தொடர்ந்து நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனேவே இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. 

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment