deepamnews.lk
இலங்கை

பொரளை தேவாலய விவகாரத்தில் அரசியல் தலையீடு-அனுரகுமார திஸாநாயக்க சந்தேகம்

banner

காவல்துறையினர் உண்மையை மறைப்பதற்காக பொரளை தேவாலய சம்பவத்துடன் தொடர்பில்லாத ஒருவரை கைது செய்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ராகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதைந்து கிடக்கும் அனைத்துக் குற்றங்களின் பின்னணியிலும் கண்ணுக்குத் தெரியாத அரசியல் கரமும் பாதுகாப்பும் இருப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியதுடன் பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார் .

இத்தகைய சூழலில் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

banner
banner
banner

Related posts

ஓமானின் 3.6 பில்லியன் டொலர் கடனை நிராகரித்தது இலங்கை

Deepam News

நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் – காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு கோரிக்கை

Deepam News

இலங்கைக்கு 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவி – பிரித்தானிய அறிவிப்பு

Deepam News

Leave a Comment