deepamnews.lk
விளையாட்டு

சிம்பாப்வே அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி

சிம்பாவே - இலங்கை அணி
banner

இலங்கை -சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 184 ஓட்டங்களால், அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இதன் மூலம், சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 24.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன்,  2 – 1 என்ற ரீதியில் இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

banner
banner
banner

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- நியூசிலாந்து அணி அறிவிப்பு

Deepam News

சென்னை சூப்பர் கிங்ஸ் கப்டனாக மீண்டும் பொறுப்பேற்றார் டோனி

Deepam News

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கப்டனாக பென் ஸ்டோக்ஸ்  பதவியேற்கிறார்

Deepam News

Leave a Comment