deepamnews.lk
விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் போராடித் தோற்றது இந்தியா

banner

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென்ஆபிரிக்கா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆபிரிக்கா கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தியா-தென்ஆபிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்க அணி, தொடரை முழுமையாக கைப்பற்றும்  முனைப்பில் விளையாடியது.

தென்ஆபிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரான டி காக் சதம் அடித்து அசத்தினார்.

130 பந்துகளில் 124 ஓட்டங்கள் அடித்த டி காக், பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மேலும் வான்டெர் துஸ்சென் 52 ஓட்டங்களும் டேவிட் மில்லர் 39 ஓட்டங்களும் பிரிட்டோரியஸ் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் தென்ஆபிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 288 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதையடுத்து தவானுடன் இணைந்த விராட் கோலி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவன் 61 ஓட்டங்களுடனும், கோலி 65 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையிலும், கடைசி கட்டத்தில் தீபக் சாகர் அரைசதம் அடித்து ஆட்டத்தை திசைதிருப்பினார்.

பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் தென் ஆபிரிக்கா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

banner
banner
banner

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- நியூசிலாந்து அணி அறிவிப்பு

Deepam News

சென்னை சூப்பர் கிங்ஸ் கப்டனாக மீண்டும் பொறுப்பேற்றார் டோனி

Deepam News

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கப்டனாக பென் ஸ்டோக்ஸ்  பதவியேற்கிறார்

Deepam News

Leave a Comment