
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன (Ajith Rohana) நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொலிஸ் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்தும் செயற்பட்டு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் ரோஹன நீண்டகாலமாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


