
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு கொழும்பு நவலோகா மருத்துவமனையில், திங்கட்கிழமை முதுகுத்தண்டில் சிறியதொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, பிரித்தானியாவின் முன்னணி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் மருத்தவர் ஹிலாலி நூர்தீனினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பிரதமர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை முன்னெடுப்பார் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வாயிலேயே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட வகையில் இந்த சிறிய அறுவைச் சிகிச்சை வாயிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


