deepamnews.lk
சர்வதேசம்

டோங்கா எரிமலை வெடிப்பு ஹிராஷிமா அணுகுண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தது – நாசா தகவல்

banner

டோங்காவில் (Tonga) அண்மையில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பும் சுனாமியும், இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்திவாய்ந்தது என்று  நாசா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பினால், டோங்கா தலைநகருக்கு வடக்கே உள்ள நுகுவாலோஃபா (Nukualofa) எரிமலைத் தீவை அழித்து விட்டதாகவும் நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

எரிமலை வெடிப்பதற்கு முன்னர் 2015 இல் உருவாக்கப்பட்ட புதிய நிலப்பகுதியுடன்,  ஹங்கா டொங்கா – ஹங்கா ஹாபாய் (Hunga Tonga-Hunga Ha’apai )எரிமலைத் தீவுகள் தனித்தனியாக இருந்தன என்றும், சக்திவாய்ந்த எரிமலை வெடிப்புக்குப் பின்னர், இரண்டு தனித் தனித் தீவுகளின் பெரும்பகுதியோடு புதிய நிலப்பரப்பும் காணாமல் போய்விட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுனாமியாலும் எரிமலைச் சாம்பலாலும் தமது நாட்டின்  சனத்தொகையில் 80 வீதமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக டோங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

banner
banner
banner

Related posts

ஜோ பைடனின் தென்கொரிய பயணத்தின் போது ஏவுகணை, அணுவாயுத சோதனைக்கு தயாராகிறது வடகொரியா

Deepam News

உக்ரேனுக்கு மிகப்பெரிய விசாரணைக் குழுவை அனுப்பியது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

Deepam News

ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும், அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

Deepam News

Leave a Comment