
இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்காக 2022/23 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 3.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் நிதியுதவியை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையில் பிரித்தானிய நலன்களை அச்சுறுத்தும் உறுதியற்றதன்மை மற்றும் முரண்பாடுகளை முறியடிக்கும் திட்டங்களுக்கே இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவின் கொழும்புப் பயணத்துக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிதி இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்படாது என்றும், பிரித்தானிய தூதரகத்தின் ஆதரவுடன் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் என்றும் பிரித்தானிய தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளின் ஒருங்கிணைப்பு மூலம் இந்த நிதி வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


