deepamnews.lk
இந்தியா

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

banner

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த  திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 11ஆம் திகதி தொடங்கி, 12 ஆம் திகதி வரை, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவிட் பரவல் காரணமாக இந்த விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, இலங்கை அரசாங்கத்தினால், இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இம்முறை இலங்கையை சேர்ந்த 500 பக்தர்கள் மட்டுமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner
banner
banner

Related posts

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது – பழ.நெடுமாறன் கருத்து

Deepam News

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிய முதல் கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர்

Deepam News

250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய சிதம்பரம் –  சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்

Deepam News

Leave a Comment