
செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது. செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன.
செம்பருத்தி டீயாக கூட எடுத்து வரலாம்.இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம்? இதில் அடங்கியுள்ள நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ – 10
தண்ணீர் – 3 கப்
எலுமிச்சம் பழம் – 1
தேன் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்க வேண்டும்.வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். அத்துடன் தேவையான தேன் கலக்க வேண்டும்.
இப்போது சுவைமிக்க செம்பருத்தி பூ ஜூஸ் தயார். குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் பரிமாறலாம்.
பயன்கள்
கிராமப்புறங்களில் பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குச் செம்பருத்திப்பூ டீ அல்லது ஜூஸ் கொடுப்பார்கள். அப்பொழுது ஏற்படும் தாங்கமுடியாத வயிற்றுவலிக்குச் சிறந்த நிவாரணி.
வெள்ளைப்படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்திவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகின்றது.


