
லிட்ரோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டமுகவர்கள் மூலமாக மட்டுமே எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. எரிவாயு விநியோகம் சேமிப்பு மற்றும் விற்பனை என்பன லிட்ரோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டமுகவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கு முரணான வகையில் சேமித்தல் மற்றும் கொள்கலன் இருப்புகள் இருக்குமாயின் அது லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அனுமதியல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80க்கும் மேற்பட்ட எரிவாயு கொள்கலன்களும் குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டில் இருந்து ஒருதொகை எரிவாயு கொள்கலன்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தபட்டது.இந்தநிலையில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைபோல் இடம்பெறுவதுடன், அதற்காக சகல தாங்கி ஊர்திகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.


