
இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.
இலங்கையில் தற்போதைய பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான யூரியாவை வழங்குவது தொடர்பாக நேற்று இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், தற்போதைய யால பருவ நெற்பயிருக்குத் தேவையான 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியாவையும், உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நெல் பருவத்திற்கான யூரியாவை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளமைக்காக புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட, இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து யூரியா ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த யூரியாவை உடனடியாக இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடன் கலந்தாலோசித்து 65ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்குவதற்கு தேவையான அனுமதிகள் மற்றும் தளபாடங்களை ஏற்பாடு செய்வதில் செயலாளர் சதுர்வேதியின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்காக மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.


