
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் எனது வீட்டுக்கு முன்பாக இராணுவத்தை நிறுத்தவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சாவிற்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பின் பெயரால் எனது வீட்டின் முன்னால் இராணுவம் நிற்பது எனது குடும்பம் மற்றும் அயலில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கிறது. அத்துடன் மக்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதாகவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


