deepamnews.lk
இலங்கை

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தூக்கிலிடப்பட்ட வேண்டும் – நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் வலியுறுத்தல்

banner

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது.

இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர்.

பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்.

திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும்.

தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம்.

எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வையுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

banner
banner
banner

Related posts

விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்

Deepam News

எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா

Deepam News

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்

Deepam News

Leave a Comment