deepamnews.lk
சர்வதேசம்

ஜோ பைடனின் தென்கொரிய பயணத்தின் போது ஏவுகணை, அணுவாயுத சோதனைக்கு தயாராகிறது வடகொரியா

banner

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொள்ளும் வேளையில் வடகொரியா அணுவாயுத அல்லது ஏவுகணை சோதனையை நடத்தலாம் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் அளித்துள்ளது.

அனைத்துவித நெருக்கடி நிலைகளுக்கும் வொஷிங்டன் தயாராவதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan) தெரிவித்துள்ளார்.

இரு கொரியாக்களுக்கிடையில் உள்ள ராணுவ சூனியப் பகுதிக்கு ஜனாதிபதி பைடன் செல்லமாட்டார் என்றும் வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

அவர் அந்தப் பகுதிக்குச் செல்வது பற்றி ஆராயப்படுவதாக சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது, அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

banner
banner
banner

Related posts

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

Deepam News

சுவீடன், பின்லாந்துக்கு புடின் கடும் எச்சரிக்கை

Deepam News

ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா -ஜோ பைடன் தெரிவிப்பு…

Deepam News

Leave a Comment