deepamnews.lk
இலங்கை

புதிய அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் – டக்ளஸ், ஜீவனுக்கும் வாய்ப்பு

banner

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களே பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, ரிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் 10 பேர் இடம்பெறுவார்கள் என்றும் தெரியவருகிறது.

அவர்கள் இன்று பிற்பகலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

banner
banner
banner

Related posts

விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்

Deepam News

எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா

Deepam News

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்

Deepam News

Leave a Comment