deepamnews.lk
இலங்கை

அஜித் டோவலை அவசரமாக சந்தித்த இலங்கைத் தூதுவர்

banner

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர், மிலிந்த மொறகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவாலை, நேற்று  புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளின் நிலை பற்றி விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும், பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது.

நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்கும், மிலிந்த மொறகொட, நன்றி தெரிவித்தார்.

இந்தச் சூழலில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு, இந்தியாவின் உதவியை மொறகொட கோரியுள்ளார்.

அதற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சாதகமாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி மற்றும் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பிரதி தூதுவர், நிலுகா கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

banner
banner
banner

Related posts

விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்

Deepam News

எரிபொருள் கோரிச் செல்லும் இலங்கை குழுவின் பயணத்தை தாமதப்படுத்தியது ரஷ்யா

Deepam News

பேருந்து நடத்துநரை தள்ளி விட்டு 60 ஆயிரம் ரூபா கொள்ளை – உமையாள்புரத்தில் சம்பவம்

Deepam News

Leave a Comment