
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அநேகமான ஊட்டச்சத்து காணப்படுவதில்லை…. பலரும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளையே உட்கொள்கிறோம்…
இவ்வாறான சில சத்தான உணவுகளை உட்க்கொள்ளும் போது ஊட்டம் பெறுவது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம் ..அந்தவகையில் அன்றாடம் நமது உணவில் மாங்காயை சேர்த்துக்கொள்வதால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்….அது மாத்திரமன்றி பச்சையாகவே தேங்காயை சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கின்றது …

தேங்காய் மாங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்,
கடுகு – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் (பெரியது) – ஒன்று,
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.


