
மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று கண்ணாடியே கண் கலங்கும் வரை ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும்.இயற்ககை அழகை பலரும் விரும்புவர் ஆனால் எவ்வாறு அதை பெறுவது என்பது பலருக்கும் தெரியாத ஓரு விடயமாக காணப்படுகிறது ..

நல்ல உணவுப் பழக்கம்: தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.
அன்றாட வாழ்வில் இவற்றை கடைப்பிடித்தால் இயற்கையான அழகு மாத்திரம் அன்றி ஆரோக்கியமான வாழ்வையும் பெற்றுக் கொள்ளலாம். ஆரோக்கியமான அழகான தோற்றத்தை பெற மறக்காம ட்ரை பண்ணுங்க உங்கள் அழகு உங்கள் கைகளில் ……


