deepamnews.lk
மருத்துவம்

குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும் , அவை பரவும் முறைகளும்..

banner

குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். தற்போதைய நிலைமையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.


இந்த நோய்பற்றிய சில விபரங்களை தெரிந்து கொள்வோம்…
‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் இது ஒரு வகை வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மனிதர்களுக்கு இடையேயும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு … மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகளில் வாழும் விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. கடுமையான தலைவலி ,காய்ச்சல்,தசை வலி, முதுகுவலி,சருமத்தில் வெடிப்பு, உடலில் ஸ்டெமினா (ஆற்றல்) குறைவது, காயம், கொப்புளம்,நிண நீர் சுரப்பிகளில் வீக்கம், போன்றவை குரங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். . . முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். பின்பு புண்கள், கொப்புளங்கள் உருவாகும். உடலில் புள்ளி, புள்ளியாக கொப்புளங்கள் நெருக்கமாக உருவாகிக்கொண்டிருக்கும். உடலில் சில பாகங்களில் சொறி உணர்வு ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் நான்கு வாரங்கள் கூட நீடிக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது நன்று..
குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகள், நிமோனியா, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர்மரணமடைந்து இருக்கின்றனர்.. தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்துக்கொள்வது மிக நல்லது ..1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த நோய் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது 1970-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

banner
banner
banner

Related posts

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா??

Deepam News

எடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி!

Deepam News

நின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்!!!!

Deepam News

Leave a Comment