
கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க இலகுவான வழிமுறைகள் பல காணப்படுகின்றன அதில் ஒன்று தான் இந்த மாம்பழ பேஸ் மாஸ்க் …அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம் . கோடைகாலத்தில் பெற்றுக்கொள்ள கூடிய பழங்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகிறது . இதில் மாம்பழச்சாறு, ஜாம், ஐஸ்கிரீம், அல்வா, பர்பி என்று பலவிதமான உணவுகள் தயாரித்து ருசித்திருப்பீர்கள். சாப்பிடுவதற்கு சுவையான மாம்பழங்கள் உங்கள் சருமத்திற்கும் சிறந்ததொன்றாகும்.. அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம்.

1 தேக்கரண்டி மாம்பழக் கூழ், 2 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி அரைத்த பாதாம் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக மாறும் வரை நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், இந்தக் கலவையை முகத்திலும், வெயிலால் பாதிப்படைந்த பகுதிகளிலும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பின்பு, குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை இந்த பேஸ் மாஸ்க்கை உபயோகித்தால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். தோலின் இளமையைப் பாதுகாப்பதற்கு: மாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வயது முதிர்வினால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது. இதற்கான பேஸ் மாஸ்க்கினை தயாரிப்பதற்கு மாம்பழம் மற்றும் முட்டையினை பயன்படுத்தலாம். இவை சருமத்தை இறுக்கமாக்கி வயதான தோற்றத்தைத் தடுக்கும். 2 முட்டையின் வெள்ளைக் கருவினைப் பிரித்தெடுத்து, நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவவும். இந்த பேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது கண்களுக்கு மிக அருகில் தடவுவதை தவிர்க்கவும். முகத்தில் பேஸ்பேக் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சரும வறட்சியினைத் தடுப்பதற்கு: மாம்பழ பேஸ் மாஸ்க் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதற்கு உதவும்.


