
யாழ்.போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு கடந்த 07ம் திகதி நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 08 திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்த நபர் ஆனைக்கோட்டையை சேர்ந்த இ.ஜெகதீசன் எனவும் டெங்கு தொற்று காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மட்டக்களப்பு – காத்தான்குடி – நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 31வயதுடைய ஆனந்தன் ஜெயராஜ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


