deepamnews.lk
மருத்துவம்

பாலில் இருக்கும் அபாயம்!!

banner

பால் பொருட்கள்கூட எளிதாக நச்சுத்தன்மை பெறலாம். அழுக்கு அல்லது மலக்கழிவு கலந்திருப்பது, பதப்படுத்தும் இயந்திரத்தின் பாதிப்பு, பசுவின் மடியில் ஏற்படும் தொற்று, பசுவின் நோய்கள், மாடுகளின் தோலில் வசிக்கும் கிருமிகள், பூச்சிகள் ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகலாம். பசு, எறுமை மாடுகள் பூச்சிக்கொல்லி, ராசாயன நச்சு கொண்ட தீவனங்களை உட்கொள்வதால் பால் பொருட்களில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். அதனால் பால் பொருட்களை பதப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான மாடுகள் குப்பைகளை மேய்கின்றன. இதனால் நச்சுக்களை உட்கொள்கின்றன. இது பாலின் தரத்தை பாதிக்கிறது. பால் பண்ணை உரிமையாளர்கள் நீர், யூரியா, காஸ்டிக் சோடா போன்றவற்றையும் சேர்க்கலாம்.

பால் பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்களில் நச்சுக்கள் கலந்திருக்கலாம். காட்டேஜ் சீஸ் தயாரிக்க நச்சுத்தன்மை கொண்ட ஆர்கிமோனே எண்ணெய் பயன்படுத்தப்படலாம். இதன் நீண்டகால பயன்பாடு சிறுநீரக, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்…

பால் பொருட்களை பயன்படுத்தும் முறைகள் :
குளிர்பதனம்: பால் பொருட்கள் குளிர்வூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். “ஈரமான இடத்தில் இருந்தால் பால் எளிதாக கெட்டுப்போகலாம். கிருமிகள் காரணமாக வெப்ப நிலையில் சீஸ், யோகர்ட் அதிகமாக புளிக்கும்” என்கிறர் டாக்டர் சைனி , பேக் செய்யப்பட்ட கிருமி நீக்கப்பட்ட சீஸ், யோகர்ட், பால் வாங்குவது நல்லது. சுவை சரியில்லை என்றால், பயன்படுத்த வேண்டாம், பாலை வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும் , பாலை ஆறு வாரங்களுக்கு ஃப்ரீசரில் வைத்திருக்கலாம். ஆனால், உருகிய பின் அது தனது மென்மையான தன்மையை இழக்கு. ஸ்கிம்ட் பால் பிரிசரில் வைக்க ஏற்றது….. பால் பொருட்களை பயன்படுத்தும் போது அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்…

banner
banner
banner

Related posts

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா??

Deepam News

எடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி!

Deepam News

நின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்!!!!

Deepam News

Leave a Comment