deepamnews.lk
அழகுக் குறிப்புக்கள்

முகத்தின் அழகிற்க்கு……..

banner

பெரும்பாலும் முகத்தின் அழகில் அக்கறை உள்ளவர்கள் பெண்களே! .. முகதத்தின் அழகை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பேணலாம். அழகில் அக்கறை கொண்ட உங்களுக்கு சில தகவல்கள் .

முகம் பொலிவடைய உதவும் பொருட்கள்: மஞ்சல் :மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.

தேங்காய் எண்ணெய்: இது சமைப்பதற்கு மாத்திரம் அன்றி சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றவும் ,முகம் பொலிவு பெறவும் உதவுகின்றது ..தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் பல மாற்றங்களை அவதானிக்க முடியும்..

எலுமிச்சைச் சாறு:எலுமிச்சை சாறை சர்க்கரையுடன் சேர்த்து கருமை ஏற்பட்ட இடங்களில் தடவவும். இது சருமம் கருமை அடைவதை நாளடைவில் குணப்படுத்தி விடும்.

பப்பாளி:பப்பாளியை நன்கு மசித்து தேன் மற்றும் முல்தானி மட்டி அல்லது இழைத்த சந்தனத்துடன் கலந்து முகத்தில் பூசவும். இது சருமத்தை மிருதுவாக்குவதுடன் பொலிவையும் கூட்டும்.

banner
banner
banner

Related posts

ஆரோக்கியமான பளபளப்பான சருமத்துக்கு மாம்பழ பேஸ் மாஸ்க் …

Deepam News

இனி மேக்கப்பே தேவையில்ல இத ட்ரை (try) பண்ணுங்க …….

Deepam News

வறண்ட சரும பிரச்சனைக்கு என்ன செய்யலாம்?

Deepam News

Leave a Comment