deepamnews.lk
மருத்துவம்

கோடை காலத்துக்கேற்ற காய்கறி!!

banner

கோடைகாலத்தில் நம்முடைய உடலுக்கு அதிக நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சி தேவைப்படுகின்றது. இவ்வாறான காலத்தில் குளிர்ச்சியை தரும் காய்கறிகள் சில :

தக்காளி: தக்காளியில் வைட்டமின் சி, கே 1, பி9 சத்துகள் நிறைந்திருப்பதால், அது ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. 95 சதவிகிதம் நீர் சத்து நிறைந்தது அது மட்டும் அல்ல நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு மற்றும் அது தொடர்பான அனைத்து பிரச்சனைகளை சரியாகும்.

கரட்: ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் கோடைக்காலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது. கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது அது மட்டுமன்றி உடல் பொலிவையும் தரக்கூடியது. மேலும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்க கூடியது.

பாகற்காய்: இதில் அநேக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது. ஆனால் பலர் இதை விரும்புவதில்லை. கோடையில் சருமத்தில் கொப்பளங்கள், தடிப்பு, படர்தாமரை போன்றவை ஏற்படும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளை மிக எளிதாகத் தவிர்க்கலாம். பாகற்காய் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வெள்ளரிக்காய்: கோடை காலத்தில் நமது உடலுக்கு நீர்ச்சத்து அதிகமாகவே தேவைப்படுகின்றது. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது கோடைக்காலத்தில் மிக அதிகமாகவே கிடைக்கிறது. உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதோடு உணவு செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

கத்திரிக்காய்: இதை ஒருமுறையாகிலும் ருசி பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருப்பதால், கத்திரிக்காய் ஆன்டி-ஆக்ஸிடன்டாகச் செயல்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.

banner
banner
banner

Related posts

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா??

Deepam News

எடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி!

Deepam News

நின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்!!!!

Deepam News

Leave a Comment