deepamnews.lk
இலங்கை

நாளை மறுதினம் முதல் வழமை திரும்பும்  பெற்றோல் விநியோகம்

banner

பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் 23 ம் திகதிக்குப் பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதனைப் பொருட்படுத்தாத மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக வாட்டும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கின்றனர். இந்த நாட்களில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டாலும் பல இடங்களில் மக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை  வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை மறுதினம், மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment