deepamnews.lk
இலங்கை

இலங்கைக்கு வர உள்ளன டீசல்,பெட்ரோல் தாங்கிய மூன்று கப்பல்.

banner

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தமையால் நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கும் எரிபொருட்களை பெற்றுக்கொள்ளவும் வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அது மாத்திரம் இன்றி டீசல் விலை அதிகரிக்கப்பட்டதால் பேரூந்துக் கட்டணமும் வரலாறுகாணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தம் 90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15ஆம் திகதிக்குள்ளும், 2ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதிக்குள்ளும், 3ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner
banner
banner

Related posts

நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிப்பு.

Deepam News

சீன உளவுக் கப்பலின் வருகையை விமர்சித்துள்ளார் அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர்.

Deepam News

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க தீர்மானம்.

Deepam News

Leave a Comment