
வரலாற்றில் முதல் தடவையாக 4000க்கும் அதிகமான பேரூந்துக் கட்டணத்திற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அதிகரிப்பானது இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணத்தை 4450.00 ரூபா வரை அறவிட தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இந்த கட்டணத்துடன் தொடர்புடைய பேருந்து சேவையை நடத்துவது சிரமமாக இருக்கும் என சம்பந்தப்பட்ட பேருந்து சேவைகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களும் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கதிர்காமம் – யாழ்ப்பாணம் பேருந்துக் கட்டணமானது இதுவரையில் அதிகபட்ச சராசரிக் கட்டணம் 2417 ரூபாயாக காணப்பட்டது. கடந்த முதலாம் திகதி முதல் 2948 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் 3000.00 ரூபாயை நெருங்கியுள்ளது.


