deepamnews.lk
விளையாட்டு

ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசி லாராவின் 19 ஆண்டு சாதனையை முறியடித்தார் பும்ரா

banner

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஒரே ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் எடுத்து, பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

பிராட் வீசிய 83 ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து ´வைட்´ முறையில் 5 ஓட்டங்களை பெற்றுத்தந்தது.

´நோ போல்´லாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சராக விளாசினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்தடுத்த பந்துகளை ´ஹாட்ரிக்´ பவுண்டரிகளாக விளாசினார்.

5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார்.

இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ஓட்டங்கள் விளாசப்பட்டது.

2003ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில், தென்ஆபிரிக்க வீரர் ரொபின் பீட்டர்சன் பந்து வீச்சில், ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் விளாசினார் பிரைன் லாரா.

அந்த சாதனையை அவுஸ்ரேலியாவின் ஜோர்ஜ் பெய்லி மற்றும்  தென்னாபிரிக்காவின் கேசவ் மகாராஜ் ஆகியோர் சமன் செய்தனர். இந்தநிலையில், பிராட்டின் ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், 19 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத லாராவின் சாதனையை, பும்ரா முறியடித்துள்ளார்.

banner
banner
banner

Related posts

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்- இலங்கை அணி அபார வெற்றி

Deepam News

மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி அறிவிப்பு

Deepam News

இலங்கைக்கு எதிரான காலி டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அவுஸ்ரேலிய அணி

Deepam News

Leave a Comment