deepamnews.lk
இந்தியா

சென்னையில் வாக்கு சேகரித்த திரவுபதி முர்மு – ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திப்பு

banner

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று தனி விமானத்தில் சென்னை வந்தார்.

அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் விடுதியில் பா.ஜ.க – அ.தி.மு.க., – பா.ம.க., – த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைச்  சந்தித்து ஆதரவு கோரினார்.

அவரை, அதிமுக சார்பில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அவர் மேடையில் இருந்து சென்றதும், ஓ. பன்னீர்செல்வம், திரவுபதியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

banner
banner
banner

Related posts

சுதந்திர தினத்தன்று காலை முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Deepam News

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது – ராகுல்காந்தி தெரிவிப்பு

Deepam News

ஜூன் மாதம் 22 இலட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!

Deepam News

Leave a Comment