
அமெரிக்க இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் விரைவில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பயணம், பெரும்பாலும் வரும் நொவம்பர் மாதம் இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கையுடனான உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே இராஜாங்க செயலர் அன்டனி பிளிங்கன் விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது இலங்கை பயணம் தொடர்பான திகதி மற்றும் விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


