அகிம்சை போராட்ட வேள்வியில் உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, இன்று உண்ணநோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு திலீபன் நினைவேந்தல் கட்டமைப்பு சார்பில், வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
“தமிழ் மக்களுக்காக உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரை நீத்த திலீபன் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது.
அகிம்சை வழியில் தமிழ் மக்களுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தி நல்லூரில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்தார்.
அவருடைய சிந்தனைகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திலீபனின் நினைவிடத்தில் அனைவரும் ஒன்று திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட அழைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமார் மற்றும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் ஆகியோரும் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.