deepamnews
இலங்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையுடன், கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 2 மணிக்கு, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

Related posts

திருகோணமலையிலிருந்து கடலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு

videodeepam

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்க முடியாது – மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

videodeepam

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

videodeepam